அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கோவிட்தொற்று உறுதியானதால், தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில்கொரோனா பரவல் அதிகரித்த போதிலும், அங்கு கட்டுப்பாட்டுவிதிமுறைகள் அமலில் உள்ளன.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்,57 நேற்று உடல் பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது
இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு நாட்களில் தன்னை சந்தித்தவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேணடும் என வலியுறுத்தியுள்ளார்.
கமலா ஹாரிஸ் ஏற்கனவே இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். கடந்த ஏப். 1-ம் தேதி பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட போதிலும் கோவிட்தொற்று பாதிப்பு இருந்துள்ளது.