Home இந்தியா மெக்னீசியம் பாஸ்பேட்டை மாங்காய் மீது தொட்டு சாப்பிட்ட மாணவர்கள்

மெக்னீசியம் பாஸ்பேட்டை மாங்காய் மீது தொட்டு சாப்பிட்ட மாணவர்கள்

by Jey

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள மோரணஹள்ளி பஞ்சாயத்தில் 910 மாணவர்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளி உள்ளது. இந்த நிலையில், இன்று மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 11 மாணவர்கள் மயக்கம் வருவதாக ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த மாணவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் மாங்காய் சாப்பிடுவதற்காக உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை மாங்காய் மீது தொட்டு சாப்பிட்டது தெரியவந்தது.

இதையடுத்து முதலுதவி சிகிச்சைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு 11 மாணவர்களும் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு உப்புக்கரைசல் கொடுக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், தற்போது மாணவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், 6 மற்றும் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆய்வகத்திற்குள் செல்ல எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும், ஆய்வகம் திறந்து இருந்ததா..? அல்லது பாதுகாப்பற்ற முறையில் பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வந்ததா..? என்ற விதத்தில் விசாரணை நடத்தினர். பள்ளி உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை எடுத்து வந்த சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

related posts