இந்தோனேஷியாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 12 பெண்கள் உயிர்இழந்தனர். ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சட்டவிரோதமாக தங்கச்சுரங்கங்கள் இயங்குகின்றன.
இங்கு, மாண்டலிங் நடால் மாவட்டத்தின் உள்ள ஒரு குக்கிராமத்தில் சட்ட விரோத சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன் தினம் அங்கு, 14 பெண்கள் மண் தோண்டும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலச் சரிவு ஏற்பட்டு 14 பெண்களும் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராடி, 12 பெண்களின் உடல்களை மீட்டனர். இரண்டு பேர் காயங்களுடன் தப்பினர்.