உயிர் போனாலும் பரவாயில்லை. எனது குருவான தருமபுர ஆதின பல்லக்கை நானே சுமப்பேன் என மதுரை ஆதினம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிகவும் பழமையான ஆதீனம், நாகை மாவட்டம் மயிலாடு துறையில் உள்ள தருமபுர ஆதீனம். இதன் ஞானபீடாதிபதி, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். தருமபுரத்தில் நடைபெற உள்ள பட்டின பிரவேச நிகழ்ச்சியின் போது, வெள்ளிப் பல்லக்கில் ஆதீனம் வீதியுலா வருவார்.
தற்கு, மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்து உள்ளார். இதற்கு தமிழகம் முழுக்க உள்ள ஆதீனங்களும், ஹிந்து அமைப்புகளும், பக்தர்களும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக, மதுரை ஆதினம் ஹரஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது: தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கி செல்வதற்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்.
மடத்திற்கு கவர்னர் வந்து சென்றதால், பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.500 ஆண்டாக நடக்கும் பாரம்பரியத்தை நடத்த கூடாது என கூறுவது வருத்தம் அளிக்கிறது.முதல்வர் ரகசிய காப்பு எடுப்பதை கூடாது என சொல்வது போல தான் பட்டினபிரவேச நிகழ்ச்சியை கூடாது என சொல்வது.
தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை முதல்வர் நேரில் வந்து பார்க்க வேண்டும்.சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறார். பட்டின பிரவேசத்தை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் செல்வேன். அரசியல் வேறு ஆன்மிகம் வேறு. இவ்வாறு அவர் கூறினார்.