Home உலகம் உக்ரைனின் பெரும்பகுதியை ரஷியா தன்னுடன் சேர்த்துக்கொள்ள திட்டம்

உக்ரைனின் பெரும்பகுதியை ரஷியா தன்னுடன் சேர்த்துக்கொள்ள திட்டம்

by Jey

உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-

மே 04, 3.00 A.M

ஐ.நா.,வின் தலையீட்டில், செஞ்சிலுவை சங்கத்தின் வாயிலாக, ஆலையில் உள்ள மக்களை பத்திரமாக வெளியேற்ற ரஷியா அனுமதி அளித்தது. இதையடுத்து, ஆலையில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.

 

நேற்றும் இந்த பணி தொடர்ந்தது. இவர்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் வாயிலாக, உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஸ்ஜியாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கிடையே ஆலையின் ஒரு பகுதியை ரஷியப் படைகள் தகர்த்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.காணொலி காட்சி வாயிலாக உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போரிஸ் ஜான்சன்

கீவ்,

ரஷியாவின் மூர்க்கத்தனமான போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. அதோடு அந்த நாட்டுக்கு ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். போர் தொடங்கியதற்கு பிறகு உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் உலக தலைவர் போரிஸ் ஜான்சன் ஆவார்.

போரிஸ் ஜான்சன் தனது உரையின்போது உக்ரைனுக்கு கூடுதலாக 300 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,882 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்தார். மேலும் “ஆயுதங்கள், நிதி மற்றும் மனிதாபிமான உதவி” மூலம் உக்ரைனை தொடர்ந்து ஆதரிப்பதாக அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ரஷியாவுடனான மோதலில் உக்ரைனின் மிகச்சிறந்த நேரம் இது. இது தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும் மற்றும் விவரிக்கப்படும். உக்ரைனியர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்த மக்களின் தார்மீக சக்திக்கு எதிராக ஒரு ஆக்கிரமிப்பாளரின் மிருகத்தனமான சக்தி ஒன்றும் இல்லை என்று உலகுக்கு கற்பித்ததாக உங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் சொல்வார்கள்” என்றார்.

முன்னதாக கடந்த மாதம் முதல் வாரத்தில் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவுக்கு நேரில் சென்று வீதியில் நடந்து சென்றபடியே அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மரியுபோல் உருக்காலை மீது ரஷியா மீண்டும் தாக்குதல் கிழக்கு உக்ரைன் குண்டுவீச்சில் 9 பேர் பலி

கீவ்,

மரியுபோல் உருக்காலை மீது ரஷியா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. கிழக்கு உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை முற்றிலுமாக கைப்பற்றும் கனவுடன் ரஷியா அங்கு தீவிரமாக சண்டையிட்டு வருகிறது.

இந்த தருணத்தில் கிழக்கு உக்ரைனின் பெரும்பகுதியை இந்த மாத கடைசியில் ரஷியா தன்னுடன் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இது பற்றி ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் கார்பென்டர் கூறும்போது, “உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சானை தனி ஒரு சுதந்திர குடியரசு பகுதியாக அறிவிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை அமெரிக்காவோ, அதன் நட்புநாடுகளோ ஒருபோதும் அங்கீகரிக்காது. மேலும், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை தன்னுடன் சேர்த்துக்கொள்ள ரஷியா பொதுவாக்கெடுப்பு நடத்த எண்ணி உள்ளது” என தெரிவித்தார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர மாஸ்கோ சென்று ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச போப் ஆண்டவர் பிரான்சிஸ் விருப்பம் வெளியிட்டபோதும், அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று வாடிகன் ஆட்சி அதிகாரத்தில் 2-ம் இடம் வகிக்கிற கார்டினல் பீட்ரோ பரோலின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் எல்லை அருகே உள்ள ராணுவ தளத்தில் ரஷியாவின் 50 ராணுவ ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது செய்கைக்கோள் படம் மூலம் தெரிய வந்துள்ளது. உக்ரைன் போரில் பெரும் இழப்புகளை சந்தித்த ரஷிய ராணுவம் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமாக உள்ளது என்று இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து 2 லட்சம் குழந்தைகள் உள்பட 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ரஷியா அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர் என ரஷிய ராணுவ அமைச்சகம் கூறுகிறது.

மரியுபோல் நகரில் உள்ள அஜோவ் உருக்காலையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் வெளியேறி பஸ்கள், ஆம்புலன்சுகள் மூலம் ஜபோரிஜியா நகருக்கு போய்ச்சேர்ந்தனர். இதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.

அந்த உருக்காலையில் எஞ்சியுள்ள மக்கள், தங்களை ரஷியாவுக்கு கொண்டு சென்றுவிடக்கூடும் என்று பஸ்களில் ஏற பயப்படுவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.

அப்பாவி மக்களை வெளியேற்றிய நிலையில் அந்த உருக்காலையை தரை மட்டமாக்கும் நடவடிக்கையை ரஷியா மீண்டும் தொடங்கி உள்ளது. ஆனால் அந்த ஆலைக்குள் இன்னும் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சிக்கி உள்ளதாக மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளார்.

related posts