Home இந்தியா பருத்தி பஞ்சுக்கு ஏற்பட்ட செயற்கை தட்டுப் பாட்டால் உயர்ந்துள்ள நுால் விலை

பருத்தி பஞ்சுக்கு ஏற்பட்ட செயற்கை தட்டுப் பாட்டால் உயர்ந்துள்ள நுால் விலை

by Jey

மாநில அளவிலான போராட்டமாக மாற்றும் முயற்சியாக, ஈரோடு, கரூர், சேலம் மாவட்ட ஜவுளித்துறையினருடன் பேச்சு வருவதாக, பின்னலாடை போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தி பஞ்சுக்கு ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாட்டால், நுால் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கடந்த, ஓராண்டாக நுால் விலை நிலையில்லாமல் இருப்பதால், பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை தொழிலில், நிட்டிங், ரைசிங், காம்பாக்டிங், டையிங், பிரின்டிங், எம்பிராய்டரிங் என, 55 தொழில் அமைப்புகள் இயங்கி வருகின்றன. பனியன் தொழில் என்பது, சங்கிலி தொடர் போன்ற தொடர்பில் இருப்பதால், ஏதாவது ஓரிடத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும், ஒட்டுமொத்த தொழிலும் ஸ்தம்பிக்கும்.

இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால், தொடர்பில்லாத நிறுவனங்களில், லட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, பஞ்சு விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு, அசாதாராண சூழலில், பனியன் தொழிலை பாதுகாக்க, பருத்தி, நுால் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். பருத்தியை அத்யாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென குரல்கொடுக்க துவங்கிவிட்டனர்.இதற்காக, பல்வேறு தொழில் அமைப்பினர் இணைந்து, வரும், 16 முதல், 21ம் திகதி வரை, தொடர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

பல்வேறு அமைப்பினர், பொதுமக்களின் ஆதரவை பெற்று, பொதுவேலை நிறுத்தமாக நடத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர்.மாவட்ட அளவிலான போராட்டமாக இல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள ஜவுளித்துறையினரை ஒருங்கிணைத்து, மாநில அளவிலான போராட்டமாக நடத்தவும் முயற்சி துவங்கிவிட்டது.

இதுகுறித்து ‘டீமா’ சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
திருப்பூர் நகரின் வளர்ச்சி, பனியன் தொழிலையே நம்பியுள்ளது. பெட்டிக்கடை துவங்கி பெரிய வணிக வளாகங்கள் வரை, பனியன் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியை சார்ந்தே உள்ளது. லாபம் குறைந்ததாலோ, நஷ்டம் ஏற்படுவதாலோ போராட்டம் நடத்தவில்லை. பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறோம்.

போராட்ட நோக்கத்தை விளக்கி, மக்கள் ஆதரவு பெறப்படும். போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட, பிற மாவட்ட ஜவுளித்துறையினரிடம் பேசி வருகின்றனர்.

related posts