கனடாவின் பல பகுதிகளில் அவசர எச்சரிக்கை குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தானியங்கி அடிப்படையில் அவசர எச்சரிக்கை அலைபேசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அவசர எச்சரிக்கையானது வெறும் பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அனர்த்த நிலைமைகளின் போது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுப்பதற்கான வழிமுறைகள் சரியான வகையில் இயங்குகின்றனவா என்பது இடைக்கிடை பரிசோதனை செய்யப்படும்.
அந்த வகையில் இன்றைய தினம் நாட்டின் சில மாகாணங்களின் செல்லிடப்பேசி பயனர்கள் இந்த அவசர எச்சரிக்கை குறித்த செய்தியை பெற்றுக்கொள்வர்.