ஒன்றாரியோ மாகாண தேர்தலில் தற்போதைய முதல்வர் டக் போர்ட் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் கண்டு அறியப்பட்டுள்ளது.
முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் டக் போர்ட் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி முதல் மே மாதம் 1ம் திகதி வரையில் இந்தக் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில் தற்போதைய முதல்வர் டக் போர்டிற்கு 41 வீத வாக்குகள் கிடைக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.