இஸ்ரேலின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல் அவிவ் அருகே உள்ள இலாத் நகரின் மையத்தில் ஏராளமானோர் கூடி கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர்.
அப்போது கூட்டத்திற்குள் புகுந்த இருவர் திடீரென எதிரே இருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், ” கத்திக் குத்து சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் உரிய விலை கொடுக்க நேரும்,” என, எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று இலாத் நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்