தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்துவதனூடாக அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொள்வோர் வன்முறையில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் என இலங்கை மருத்து சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் எதிர்ப்பிற்கு செவிசாய்த்து பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது, தற்போதைய ஸ்திரமற்ற நிலையை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும்
சாதாரண குடிமக்களின் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.