சைபீரியாவின் கிரஸ்னயார்ஸ்க் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயினால் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
திடீரென பற்றிய தீ குடியிருப்புகளுக்கு பரவி காட்டுத் தீயாய் பரவியுள்ளது. 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களை காட்டுத் தீ பரவியுள்ளதுடன்,, 350க்கும் மேற்பட்ட கட்டடங்களை உருக்குலைத்தன.
மோசமான வானிலையால் கட்டுக்கடங்காமல் தீ பரவி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.