பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அநுராதபுரத்திலுள்ள ஜய ஶ்ரீ மகா போதிக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ருவன்வெலிசாய விகாரைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு பின்னர் தேரரிடம் ஆசி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மிரிசவெட்டி விகாரைக்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இதன்போது, பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சிறு குழுவினரால் அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.