அல்பர்ட்டாவில் தாய் ஒருவரும் அவரது எட்டு மாத சிசுவும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நீவெல் கவுன்டியில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு சடலங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணைகளின் போது மேலும் ஒரு ஆணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனை நாளைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.