நேபாளத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் உலகின் மிகப்பெரிய மலைச் சிகரமான எவரெஸ்ட்டில் 26வது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் உலகின் எட்டு உயரமான மலைச் சிகரங்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக இங்கு மலையேற்ற வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுஇருந்தது.
கடந்த ஆண்டு முதல் மலைச் சிகரங்களில் ஏற அவர்கள் மீண்டும்அனுமதிக்கப்பட்டனர்.உலகின் மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்ட்டில் ஏற 316 பேருக்கு நேபாள அரசு இந்த ஆண்டு அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீட்டா 52, என்பவர்எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் 26வது முறையாக ஏறி தன் பழைய சாதனையை முறியடித்துஉள்ளார்.
இவர் ‘ஷெர்பா’ எனப்படும் இமயமலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.கமி ரீட்டா உட்பட 11 பேர் அடங்கிய குழு நேற்று முன்தினம் 8848 மீட்டர் உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.