Home உலகம் சீன அதிபர் ஜி ஜின்பிங்ற்கு ரத்த நாளங்களில் பாதிப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங்ற்கு ரத்த நாளங்களில் பாதிப்பு

by Jey

சீன அதிபர் ஜி ஜின்பிங் சிறு மூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுபவர் ஜி ஜின்பிங். கடந்த 2013 ஆம் ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் பதவி வகித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை. வெளிநாட்டு தலைவர்கள் யாரையும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் வரையிலும் சந்திக்காமல் இருந்தார். இதனால், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு யூகங்கள் பரவின.

இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் அவருடைய சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், சீன பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அவர் 3-வது முறையாக அதிபர் பதவியை கைப்பற்றுவதில் கடும் சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

related posts