Home உலகம் அமெரிக்காவை பணிய வைக்க வட கொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை

அமெரிக்காவை பணிய வைக்க வட கொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை

by Jey

வட கொரியா அணு ஆயுத தயாரிப்பை கை விட்டால் அந்நாடு சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கான பிரத்யேக திட்டம் தன்னிடம் உள்ளதாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசிய நாடான வட கொரியா அணு ஆயுதங்களை தயாரிப்பதால் அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதை அகற்ற வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்காத வரை தடை தொடரும் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து தென் கொரியா ஜப்பான் ஆகிய அண்டை நாடுகளை அச்சுறுத்தவும் அந்நாடுகளுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவை பணிய வைக்கவும் வட கொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை சோதனையை வட கொரியா மேற்கொண்டது.
இந்நிலையில் நேற்று தென் கொரியாவின் புதிய அதிபராக யூன் சுக் யியோல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் அவர் பேசியதாவது:வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் குறித்து பேச்சு நடத்த தென் கொரிய வாசல்கள் எப்போதும் திறந்திருக்கும். வட கொரியா அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிடும்பட்சத்தில் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பிரத்யேக திட்டம் வைத்துள்ளேன். இத்திட்டத்தை சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தினால் வட கொரிய பொருளாதாரம் செழிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

related posts