Home இந்தியா மேயர் சைதை துரைசாமி திறந்து வைக்கும் எம்.ஜி.ஆர். இலவச மருத்துவமனை

மேயர் சைதை துரைசாமி திறந்து வைக்கும் எம்.ஜி.ஆர். இலவச மருத்துவமனை

by Jey

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., சர்வதேச மனிதநேய அறக்கட்டளை மற்றும் ஆரோக்யா பாரதி இணைந்து ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். இலவச மருத்துவமனை’ இன்று திறக்கப்படுகிறது.சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லவும்;

ஆதரவற்றோருக்கு கல்வி, உணவு, தங்குமிடம்; காது கேளாதோர், வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு, எம்.ஜி.ஆர்., மனிதநேய அறக்கட்டளை சேவை செய்து வருகிறது.இத்தகைய சேவை புரிந்து வரும் அறக்கட்டளையும், ஆரோக்யா பாரதியும் இணைந்து ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.இலவச மருத்துவமனையை, இன்று காலை 10:30 மணிக்கு, ஸ்ரீராமபுரம் அம்பேத்கர் நகர் ஐந்தாவது மெயின்ரோடு, ஆறாவது கிராசில் இன்று கலை  சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி திறந்து வைக்கிறார்.

உரிமை குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நலிவுற்றோர் நல அறக்கட்டளையின் எம்.ஜி.ஆர்., ரவி பங்கேற்கிறார்.விழா குழுவினர் மனோகரன், ராஜ் கார்த்திக், பழனி, சடகோபன், ராதா கிருஷ்ணன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இவ்விழாவில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவின் அனைத்து எம்.ஜி.ஆர்., அமைப்பினர் கலந்து கொள்கின்றனர், என்று அறக்கட்டளை பொது செயலர் எம்.ஏ.பழனி தெரிவித்துஉள்ளார்.

 

related posts