Home உலகம் துருக்கியில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது

துருக்கியில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது

by Jey

துருக்கியில் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

உழைப்பாளர் தினமான நேற்றைய தினம் துருக்கியில் பாரியளவில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் பெரிய நகரமான இஸ்தான்புல்லில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் கொவிட் நோய்த் தொற்று பரவுகை விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தினால் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

துருக்கியில் கொவிட் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்த முயற்சியின் போது அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடி, தொழில் இன்மை போன்ற பிரச்சினைகளை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

related posts