Home இலங்கை உத்தியோகபூர்வமாக கடனை செலுத்தாத நாடாக இலங்கை…..

உத்தியோகபூர்வமாக கடனை செலுத்தாத நாடாக இலங்கை…..

by Jey

சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களால் உத்தியோகபூர்வமாக கடனை செலுத்தாத நாடாக இலங்கை அறிவிக்கப்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரண்டு தவணைக்கான சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களைச் நாளைய தினத்திற்குள் இலங்கை செலுத்தத் தவறினால், மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி நடந்தால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் மேலும் பல சவால்களை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் திணறும் இலங்கை – சர்வதேச ரீதியாக ஏற்படவுள்ள நெருக்கடி

இலங்கையினால் செலுத்தப்படாத இரண்டு வெளிநாட்டுப் பத்திரங்களுக்கான 30 நாள் கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளது. ஆனால் நாளை தினத்திற்கு முன்னர் அதற்கான வட்டி செலுத்தத் தவறினால், அது முறையான கடன் செலுத்த தவறியமையாக கருதப்படலாம். அதற்கமைய முதன்முறையாக இலங்கை கடன் செலுத்த தவறியமையாக கருதப்படும்.

ஏப்ரல் நடுப்பகுதியில், நாடு டொலர் பற்றாக்குறையை எதிர்கொண்டதால், உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு பணத்தை சேமிப்பதற்காக ஏப்ரல் நடுப்பகுதியில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் திணறும் இலங்கை – சர்வதேச ரீதியாக ஏற்படவுள்ள நெருக்கடி

சில நாட்களுக்குப் பிறகு, 2023-2028 காலப்பகுதிக்கான பத்திரங்களுக்கு செலுத்த வேண்டிய 78 மில்லியன் டொலர் வட்டியை இலங்கை செலுத்தத் தவறிவிட்டது. இந்த நிலைமை கடன் செலுத்த தவறியமையாக S&P உலகளாவிய மதிப்பீட்டு தரநிலையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைக் காலம் முடிவதற்குள் இலங்கை வட்டி செலுத்தத் தவறினால், அது முறையான உடன்படிக்கையின்றித் தவறியதாக இருக்கும் என சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நிதி நிபுணரான Carlos de Souza தெரிவித்துள்ளார்.
பிரபலமான செய்தி

 

 

related posts