Home உலகம் ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் ரஷ்யாவால் தாக்கப்படலாம்

ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் ரஷ்யாவால் தாக்கப்படலாம்

by Jey

வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ அமைப்பில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இணைவதை எதிர்த்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யா உடன் 1,300 கி.மீ., எல்லையை பகிர்ந்துள்ள வட ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன், நேட்டோ அமைப்பில் இணைவதாக அறிவித்துள்ளது, ரஷ்யாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, ரஷ்ய வெளியுறவு துறை இணையமைச்சர் செர்ஜி ரியப்கோவ் கூறுகையில், ”ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைந்தால், அதற்கு தகுந்த பதிலடியை ரஷ்யா தரும்.

இந்த தவறான முடிவால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்,” என்றார்.உக்ரைன் போல ரஷ்யாவால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைய முடிவு செய்து உள்ளன.

 

related posts