ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த ஆண்டில் அதிகளவான விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு இதுவரையில் 100 ஆபத்தான வாகன விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கவனயீனமாக வாகனங்கள் செலுத்தப்பட்ட காரணத்தினால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்துக்களினால் ஒன்றாரியோவில் இதுவரையில் இந்த ஆண்டில் 107 மரணங்கள் சம்பவித்துள்ளன.
போதைப் பொருள் பயன்பாடு, வேகமாக வாகனத்தைச் செலுத்துதல் மற்றும் வாகன சாரதிகளின் கவனயீனம் என்பனவற்றினால் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன.