Home உலகம் அமெரிக்க அதிபர் நாளை தனது ஆசிய பயணத்தை மேற்கொள்கிறார்

அமெரிக்க அதிபர் நாளை தனது ஆசிய பயணத்தை மேற்கொள்கிறார்

by Jey

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை தனது முதல் ஆசிய பயணத்தை மேற்கொள்கிறார். அவர் அமெரிக்க நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் நடத்திய உச்சி மாநாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இந்த ஆண்டு ஐநா விதித்த பல தடைகளை மீறி தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஜோ பைடனின் ஆசிய வருகையை முன்னிட்டு வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பயணத்தின் போது வடகொரியா, அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனைகள் அல்லது அணு ஆயுத சோதனை மேற்கொள்ளலாம் என்று உளவுத்துறை தெரிவிப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.

related posts