Home உலகம் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை- பாகிஸ்தான்

அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை- பாகிஸ்தான்

by Jey

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. நிதிபற்றாக்குறை , அதிகரித்து வரும் பணவீக்கம், குறைந்து வரும் அன்னிய செலவாணி கையிருப்பு மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை என பல்வேறு பிரச்சினைகளை அந்தநாடு எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதுபற்றி ஷபாஸ் ஷெ ரீப் கூறுகை யில், “தேவையற்ற மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விலைமதிப்பற்ற அன்னிய செலாவணி செலவிடப்படாது” என கூறினார்.

 

related posts