கியூபெக் மொழிக் கொள்கை தொடர்பில் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
96 பில் எனப்படும் இந்த சட்டம் பிரெஞ்சு மொழியை வலுப்படுத்தும் வகையிலும் ஆங்கில மொழி பேசுவோருக்கு பாதகமானதாகவும் அமைந்துள்ளது என சில தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சட்டம் தொடர்பில் சமஷ்டி அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சியும் சமஷ்டி அரசாங்கமும் நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.