Home இலங்கை இலங்கையில் இன்று பதவியேற்ற சில அமைச்சர்கள்

இலங்கையில் இன்று பதவியேற்ற சில அமைச்சர்கள்

by Jey

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சரவையின் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.

பலத்த இழுபறிக்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சில வாரங்களாக ரணில் நடத்திய தீவிர கலந்துரையாடலை அடுத்து இணக்கம் வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை சேர்ந்த 9 பேர் இன்றையதினம் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த அமைச்சரவையில் ராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த செயற்பட்டார். இதன்போது அரசாங்கத்தின் மோசமான நிலைமைப்பாடு குறித்து பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

 

இதனால் ஆத்திரமடைந்திருந்த அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். அவ்வாறு செய்யத் தவறினால் அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என பசில் எச்சரித்திருந்தார்.

இதற்கு அடிபணித்த கோட்டாபய ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்தவை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். இந்நிலையில் இன்றைய தினம் கல்வி அமைச்சராக பதவியேற்று அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கையினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

related posts