Home இந்தியா டேன்டீயில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழல்

டேன்டீயில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழல்

by Jey

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் (டேன்டீ) கடந்த 1962-ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

சுமார் 4 ஆயிரத்து 53 ஹெக்டேர் நிலப்பரப்புடன் தொடங்கப்பட்டு 9 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் கூடலூர் பாண்டியாறு, சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், நடுவட்டம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் பணிபுரிந்து வந்தனர். இதுதவிர 6 தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.

தேயிலை விலை ஏற்றத்தாழ்வு உள்பட பல்வேறு காரணங்களால் மிகவும் நலிவடைந்த நிலையில் தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்க முடியாமல் உள்ளது. இதனால் டேன்டீயில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழல் உள்ளது.

தேயிலை உற்பத்தி உச்சநிலையில் இருக்கும் தற்போதைய காலகட்டத்தில் நிதி சுமையின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை இருந்தும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.

related posts