Home கனடா காம்ப்லூப்ஸ் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி

காம்ப்லூப்ஸ் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி

by Jey

காம்ப்லூப்ஸ் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.

கத்தோலிக்க தேவாலயங்களினால் நிர்வாகம் செய்யப்பட்ட காம்ப்லூப்ஸ் வதிவிடப் பாடசாலைகளில் கற்ற மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான பூர்வகுடியின சிறார்கள் இந்த பாடசாலைகளில் தங்களது கல்வியைத் தொடர்ந்திருந்தனர்.

குறித்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அடையாளம் காணப்படாத புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதை குழிகள் கண்டு பிடிக்கப்பட்டதனை நினைவு கூரும் வகையில் இன்றைய தினம் தேவாலயத்தில் விசேட ஆராதணைகள் நடைபெறவுள்ளது.

இந்த ஆராதணைகளில் ஆளுனர் நாயகம் மேரி சிமோன் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிட்ட அடிப்படையில் பழங்குடியின சிறார்கள் இனவழிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்களுக்காக புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts