உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் திகதி போரைத் தொடங்கியது. 3 மாதமாக இந்தப் போர் நீடித்து வருகிறது. உக்ரைன் போர் குறித்த அண்மைச்செய்திகளை கீழ் காணலாம். உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 4-வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது.
வலிமையான படைகள் மூலம் உக்ரைனை எளிதாக ஆக்கிரமித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ரஷியா இந்த போரை தொடங்கிய சூழலில், உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போரை எதிர்கொண்டு வருவதால் போரின் இலக்கை எட்ட முடியாமல் ரஷியா திணறி வருகிறது.
மேலும் இந்த போரில் உக்ரைனை காட்டிலும் ரஷியா பெரும் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை இணைக்கும் ஆற்று பாலத்தை உக்ரைன் வீரர்கள் தாக்கி அழித்தபோது, ரஷியாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலியாகினர்.
இது போரில் ரஷியாவுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 3 மாதங்களில் பலியான ரஷிய படை வீரர்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் 9 ஆண்டுகள் நடந்த போரில் சோவியத் யூனியன் சந்தித்த உயிரிழப்புகளுக்கு சமம் இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.