Home உலகம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மோடி வழங்கிய கலைவடிவம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மோடி வழங்கிய கலைவடிவம்

by Jey

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மோடி, சான்ஜி எனப்படும் காகித்தை வெட்டி உருவாக்கப்படும் கலைவடிவத்தை வழங்கினார். உத்தரபிரதேசத்தின் மதுராவில் தோன்றிய கலைவடிவம் இது.

ஜப்பானில் ‘குவாட்’ மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி, ஆஸ்திரேலிய பிரதமர், ஜப்பான் இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கிய பரிசுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதேபோல மத்தியபிரதேச பழங்குடியின மக்களால் உருவாக்கப்பட்ட கோண்டு ஓவியம் ஒன்றை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசுக்கு மோடி பரிசாக அளித்தார்.

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு, குஜராத்தின் கட்ச் பகுதி ரோகன் ஓவியம் பொறிக்கப்பட்ட, கையால் செதுக்கிய ஓர் அழகான மரப்பெட்டியை மோடி வழங்கினார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர்களான யோஷிடே சுகா, யோஷிரோ மோரி, ஷின்சோ அபே ஆகியோருக்கு தமிழ்நாட்டின் பத்தமடை பாய்களை நரேந்திர மோடி பரிசாக அளித்தார்.

 

related posts