திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணிகள் 49, 50 மற்றும் காயாமொழி பிச்சுவிளை ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து ரத்த அழுத்த பரிசோதனை முகாமை நடத்தின.
முகாமில் கல்லூரி முதல்வர் ஜெயந்தி முன்னிலையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில், மாவட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் வர்ஷா, காயாமொழி மருத்துவ அலுவலர் டாக்டர் அகல்யா, சுகாதார ஆய்வாளர்கள் செல்வகுமார், பாலகணேஷ், நடமாடும் பொது மருத்துவ குழு செவிலியர் நளினி மற்றும் திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 560-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஜான்சிராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.