கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அரவேனு சக்கத்தா மாரியம்மன் கோவில் அருகே கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். ஹெல்மெட் அணிவதால் விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது.
மேலும் அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என்று விளக்கி கூறினர்.