Home விளையாட்டு இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற குதிரை பந்தயம்

இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற குதிரை பந்தயம்

by Jey

கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயம், ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற குதிரை பந்தயம் கடந்த மாதம் 14-ந் திகதி தொடங்கியது. ஊட்டியில் நடக்கும் குதிரை பந்தயங்களில் தி நீல்கிரிஸ் 1,000 மற்றும் 2,000 கின்னீஸ், நீலகிரி தங்க கோப்பை, தி நீல்கிரீஸ் டெர்பி ஆகியவை முக்கிய பந்தயங்களாகும்.

இதில் தி நீல்கிரிஸ் 1000 மற்றும் 2000 கீன்னீஸ் உள்ளிட்ட பந்தயங்கள் நடைபெற்று முடிந்தது. இந்தநிலையில் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த முக்கிய பந்தயங்களில் ஒன்றான ‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட்-1 குதிரை பந்தயம் இன்று நடந்தது. இந்த பந்தயத்துக்குக்கான மொத்த பரிசு தொகை ரூ‌.43 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.

நடந்த 5 பந்தயங்களில் 2-வது பந்தயம் ‘நீல்கிரிஸ் டெர்பி’ பந்தயமாகும். அதில் 1,600 மீட்டர் தூரத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 12 குதிரைகள் பங்கேற்றன. இந்த பந்தயத்தில் ஜெர்வன் என்ற ஜாக்கி ஓட்டிய குயின் ஸ்பிரிட் என்ற குதிரை வெற்றி பெற்றது.

இதன் உரிமையாளரான மன்ஜிரி குழுமத்திற்கு ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்து 775 பரிசாக வழங்கப்பட்டது. இதேபோன்று ராணுவ கல்லூரி கோப்பைக்கான பந்தயத்தில் சாய் குமார் என்ற ஜாக்கி ஓட்டிய ஈகிள் பிரின்ஸ் என்ற குதிரையும், எம்.ஆர்.சி. கோப்பைக்கான போட்டியில் கவுரவ் சிங் என்பவர் ஓட்டிய அன்டினையபில் என்ற குதிரையும் முதலிடத்தை பிடித்தது.

இதை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் பந்தயம் நடந்தது. ரத்து குதிரை பந்தயத்தை காண மைதானத்துக்குள் வருபவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டது. மேலும் பெங்களூரு, மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆன்லைன் மூலம் நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதை நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதற்கிடையே இன்று மதியத்திற்கு பின்னர் பலத்த மழை பெய்ததால் 5 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டது. 6, 7, 8-வது போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் அறிவித்தது.

related posts