Home இந்தியா கறிக்கோழி விலை அதிகரிப்பு மாநில அளவில் போராட்டம்

கறிக்கோழி விலை அதிகரிப்பு மாநில அளவில் போராட்டம்

by Jey

மதுரை மாவட்டத்தில் 650 க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. வாரம் 2 லட்சம் கோழிகள் வளர்த்து விற்பனைக்கு செல்கிறது. இப் பண்ணை உரிமையாளர்களுக்கு பல்லடம் தனியார் கறிக்கோழி கம்பெனிகள் குஞ்சுககளை கொடுக்கின்றன. குஞ்சுகளை பண்ணை உரிமையாளர்கள் 45 நாட்கள் வளர்த்து திரும்ப கம்பெனியிடம் ஒப்படைக்கின்றனர்.

‘குஞ்சுகளை வளர்த்து கறிக்கோழியாக விற்பனை செய்யும் பண்ணையாளர்கள் போராட்டத்தால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பாதித்துள்ளதுடன், கறிக்கோழி விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது கிலோவுக்கு ரூ.6.50 கொடுக்கின்றனர். குஞ்சுகளுக்கு தேவையான தீவனம், மருந்து அதிகரித்துவிட்டன. பண்ணையை நடத்தும் செலவும் உயர்ந்தும் அதே விலை கொடுப்பதால் பண்ணையாளர்கள் 24 நாட்களாக குஞ்சுகளை வாங்க மறுத்து பண்ணைகளை மூடியுள்ளனர்.பண்ணை உரிமையாளர் குமரேசன் கூறியதாவது:

குஞ்சு வளர்ப்புக்கு உரிய விலை தராததால் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்வோருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கிலோவுக்கு ரூ.12 கொடுத்தால்தான் தொழிலை நடத்த முடியும். அரசு, கம்பெனி, பண்ணையாளர் என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தால் மட்டுமே தொழிலாளர்கள், பொதுமக்களை பாதிப்பில் இருந்து காக்க முடியும். இது குறித்து முதல்வர் மற்றும் கால்நடை அமைச்சகத்தில் மனு கொடுத்துள்ளோம், என்றார்.

கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க செயற்குழு உறுப்பினர் பால்பாண்டி கூறுகையில், ”போராட்டம் தீவிரமாகி வருகிறது. பலபகுதியில் குஞ்சுகளை இறக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பியதால் வழக்கு பதிவாகி உள்ளது.

போராட்டத்தால் விலை அதிகரித்து வருகிறது. இம்மாத இறுதியில் சென்னையில் மாநில அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார். தொழிலாளி ஜெயமணி கூறுகையில், ”இரவு பகலாக பராமரித்து வளர்த்து கொடுத்தால் ஒரு குஞ்சுக்கு ரூ.3 தருகின்றனர். கடந்த 24 நாட்களாக வேலை இல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளோம்” என்றார்.

related posts