Home இந்தியா ஆதார் கார்டு விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு

ஆதார் கார்டு விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு

by Jey

ஆதார் கார்டு விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதால், அதன் நகலை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும், மாஸ்க்டு(மறைக்கப்பட்ட) ஆதார் கார்டு நகலை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அறிக்கையை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்துள்ள மத்திய அரசு, ஆதார் எண்ணை பயன்படுத்துவதிலும், பகிர்ந்து கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொது மக்கள் அனைவரும், தங்களின் ஆதார் கார்டு நகலை எந்தவொரு நிறுவனம் மற்றும் அமைப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது, ஒருவேளை தவறாக பயன்படுத்தபட வாய்ப்பு உள்ளது.

இதற்கு பதில், ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை மட்டும் காண்பிக்கும் மாஸ்க்குடு ஆதார் கார்டை பயன்படுத்தலாம். இதனை யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in. பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

related posts