கேரளா மாநிலம் திருச்சூரில் வெஸ்ட் நைல் காய்ச்சல் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் நைல் காய்ச்சல் என்பது வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்த வைரஸ், கொசுக்கள் மற்றும் பறவைகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.
மேலும் இந்த வகை வைரஸ் நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாது என்றாலும், ரத்த
தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றின் மூலம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தலைவலி, காய்ச்சல், தசைவலி, சோர்வு, தலைசுற்றல் ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும். அதே சமயம் சிலருக்கு மூளை வீக்கம் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற பிரச்சனைகளும் இந்த வைரசால் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.