Home உலகம் மோனாலிசா ஓவியத்தின் கண்ணாடியின் கேக் மேல்பட்டதால்

மோனாலிசா ஓவியத்தின் கண்ணாடியின் கேக் மேல்பட்டதால்

by Jey

லியொனார்டோ டா வின்சி என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் வரைபட்டு உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாக மோனாலிசா ஓவியம் விளங்குகிறது. இது பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மோனாலிசா ஓவியம் வைக்கப்பட்டு இருக்கும் அருங்காட்சியகத்திற்கு சக்கர நாற்காலியில் மூதாட்டி ஒருவர் வந்துள்ளார்.

மோனாலிசா ஓவியம் அருகே சக்கர நாற்காலியில் வந்த அவர் திடீரென குதித்து எழுந்தார். அப்போது தான் அவர் மூதாட்டி வேடமிட்ட ஆண் நபர் என்பது அனைவர்க்கும் தெரிந்தது.

மோனாலிசா ஓவியம் அருகே சென்ற அவர் ஓவியத்தின் மீது கேக்-யை பூசினார். உடனடியாக சுதாரித்து கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு இருந்து அவரை அழைத்து சென்றனர்.

நல்ல வேளையாக கேக் ஓவியத்தின் கண்ணாடியின் மேல்பட்டதால் ஓவியத்துக்கு சேதாரம் ஏற்படவில்லை. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அங்கு இருந்த பார்வையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

related posts