ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண் பார்வையை இழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது பற்றி ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிபர் விளாடிமிர் புடின் 69 புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருக்காது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையை இழந்து வருகிறார். அவர் பேச வேண்டியதை பெரிய எழுத்துக்களில் உருவாக்கித் தர வேண்டியுள்ளது.
கை கால்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோய்க்காக இம்மாத துவக்கத்தில் புடினுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் புடின் உடல்நிலை குறித்த இந்த தகவல்களை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார்.