Home உலகம் ஸ்ட்ராபெர்ரி பழங்களை தூக்கி எறிய வேண்டும்” அமெரிக்க நோய் தடுப்பு மையம்

ஸ்ட்ராபெர்ரி பழங்களை தூக்கி எறிய வேண்டும்” அமெரிக்க நோய் தடுப்பு மையம்

by Jey

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஸ்ட்ராபெர்ரி பழங்களை தூக்கி எறியுங்கள் என தெரிவித்துள்ளது. வாஷிங்டன், ‘ஆர்கானிக்’ ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருந்து பரவும் ஹெபாடிடிஸ் நோய் குறித்து அமெரிக்கா மற்றும் கனடா உணவு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் கடந்த சில தினங்களுக்கு 17 நபர்களுக்கு ஹெபாடிடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நோய் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து நடந்த விசாரணையில் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த அடுத்தகட்ட ஆய்வில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நீங்கள் எப்போது உங்கள் ஸ்ட்ராபெர்ரிகளை வாங்கியுள்ளீர்கள், அல்லது அவற்றை உறைய வைப்பதற்கு முன்பு எங்கிருந்து வாங்கினீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை தூக்கி எறிய வேண்டும்” என்று எச்சரித்துள்ளது.

related posts