Home கனடா றொரன்டோவில் வரலாறு காணாத வெப்பநிலை

றொரன்டோவில் வரலாறு காணாத வெப்பநிலை

by Jey

றொரன்டோவில் இன்றைய தினம் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 78 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் கூடுதல் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

றொரன்டோ வளிமண்டவியல் திணைக்களம் இன்றைய தினம் 32 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இது 1944ம் ஆண்டில் பதிவான 31.1 பாகை செல்சியஸ் வெப்பநிலையை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் அளவிலான வெப்பநிலையானது வயோதிபர்கள், சிறு குழந்தைகள் ஆகியோரை பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

related posts