படகு விபத்துச் சம்பவமொன்றில் சிக்கியவர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
றொரன்டோவின் ஒன்றாரியோ நதியில் பயணம் செய்த படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய எட்டு பேரை பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படகு இன்னமும் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.