Home உலகம் பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை இழக்க நேரிடும்- இம்ரான்கான்

பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை இழக்க நேரிடும்- இம்ரான்கான்

by Jey

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது.
இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

தனது அரசை வெளிநாட்டு சக்தி சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும், உடனே பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகிறார். தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும் தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கமும் மறுத்துள்ளன. மேலும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இம்ரான் கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து பாசிச நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்தியா அளித்து வரும் மனிதாபிமான உதவிகளை ஆய்வுசெய்ய இந்திய குழு ஆப்கானிஸ்தானுக்கு பயணம் இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இம்ரான் கான், பாகிஸ்தானின் நிர்வாக கட்டமைப்பில் பல பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்தார்.

நிர்வாகம் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், மோசமான அழிவை சந்திக்கும் எனவும், நாட்டின் ராணுவமே முதலில் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் பாகிஸ்தான் மூன்றாக பிரிந்துவிடும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், உக்ரைன் நாட்டில் கடந்த 1990-களில் நடந்ததைப் போல, உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானும் தனது அணு ஆயுத பலத்தை இழக்க நேரிடும் என அவர் எச்சரித்தார். இம்ரான் கானின் இந்த கருத்துக்கு அந்நாட்டின் தலைவர்கள் பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், பாகிஸ்தானை பிரிப்பது பற்றி எந்த ஒரு பாகிஸ்தானியரும் பேச மாட்டார் என்றும், இம்ரான் கானின் பேச்சு ஒரு உண்மையான பாகிஸ்தானியரைப் போன்றதாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

related posts