Home இலங்கை இலங்கைக்கு பயணம் செய்ய தயாராகி வந்த சுமார் 400,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்………….

இலங்கைக்கு பயணம் செய்ய தயாராகி வந்த சுமார் 400,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள்………….

by Jey

எதிர்காலத்தில் நாட்டிற்கு வரவிருந்த சுமார் 400,000 சுற்றுலாப் பயணிகளை நாடு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய ஏரோப்லொட் விமானம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால், இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் மற்றுமொரு தனியார் நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தை தடுத்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதனால் சுமார் 200 ரஷ்ய சுற்றுலா பயணிகள் மற்றும் அதன் பணியாளர்கள் கடுமையான சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ரஷ்ய அரசாங்கம் இலங்கைக்கான தூதுவரை அழைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. அத்துடன் எதிர்காலத்தில் இலங்கைக்கான வர்த்தக விமானங்களை இடைநிறுத்தியுள்ளதுடன் விமான டிக்கெட் வழங்குவதையும் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் இலங்கைக்கு பயணம் செய்ய தயாராகி வந்த சுமார் 400,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை இரத்துச் செய்ய வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக உலகின் சில முன்னணி நாடுகள் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை டொலர்கள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ரஷ்ய சுற்றுலா பயணிகளின் வருகையும் இலங்கைக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற தேவையற்ற சிக்கலை உருவாக்கி, ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இழக்கும் அபாயத்தை யார் உருவாக்க விரும்புகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

related posts