மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினால் நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கு தடை ஏற்படும் வகையில் செயற்பட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையால் நாட்டில் மின் விநியோக தடை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
அத்துடன் இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மின்சார சபையின் பொறியியலாளர் சங்க தலைவர் அனில் இன்டுருவ, செயலாளர் தம்மிக்க விமலரட்ன ஆகியோர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை திடீரென மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தொழிற்சங்கங்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர்.
எனினும், இன்று காலை பல பகுதிகளில் சில மணித்தியாலங்கள் முன்னறிவிப்பின்றி மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.