Home இந்தியா அணைக்கட்டுகளை சீரமைக்க அரசு உத்தரவு

அணைக்கட்டுகளை சீரமைக்க அரசு உத்தரவு

by Jey

திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 586 ஏரிகள் உள்ளன. நீர்
நிலைகளுக்கு மழை நீர் சென்றடையும் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததாலும், நீர் நிலைகள் முறையாக துார் வாரப்படாததாலும், இவற்றில், 520 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு போயுள்ளன.

மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில், பருவ மழைக்கு முன், வரத்து கால்வாய்கள், 30 ஏரிகள் மற்றும் நான்கு அணைக்கட்டுகளை சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், கூவம், கொசஸ்தலை,அடையாறு, ஆரணி ஆகிய ஆறுகளின் கீழ் நீர்வள துறை கட்டுப்பாட்டில் 586 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை நம்பி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.இதில் ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் நீர் சேகரமாவதில் ஏற்பட்ட சிக்கலில் இன்று ஏரிகள் நீரின்றி வறண்டு இருக்கின்றன.

மேலும், ஏரிகளில் துார் வாரும் பணி என்ற பெயரில் முறைகேடாக இஷ்டப்படி சவுடு மண் அள்ளப்பட்டதால் பல ஏரிகளில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முறையாக ஆய்வு செய்யாததே காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பல ஏரிகள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி குடியிருப்புகளாகவும், விளை நிலங்களாகவும், சில ஏரிகள் குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுளளன.மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள துறை கட்டுப்பாட்டில் 586 ஏரிகளில், 520 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.

எனவே, மாவட்ட நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் சேகரமாகும் வகையில் முறையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து நீர்வள துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆரணி ஆறு கோட்டத்தின் கீழ் 250 ஏரிகளில், 22 ஏரிகள் மற்றும் நான்கு அணைக்கட்டுகள் 7.47 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரி சீரமைக்க அரசிடமிருந்து உத்தரவு பெறப்பட்டு ‘டெண்டர்’ விடப்பட்டுள்ளது.விரைவில் ஏரிகளில் வரத்து கால்வாய் சீரமைத்தல், மதகுகள் சீரமைத்தல் மற்றும் நீர் சேகரமாகும்

இதேபோல், கொசஸ்தலை ஆறு கோட்டத்தின் கீழ் 336 ஏரிகள் உள்ளன. இதில் மிகவும் பழுதடைந்துள்ள ஏரிகள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம்.விரைவில் கணக்கெடுக்கும் பணிகள் நிறைவு பெற்று ஏரிகள் சீரமைப்பு குறித்து அரசுக்கு தகவல் அளித்து, உத்தரவின்படி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதில், கடம்பத்துார் ஒன்றியத்தில், செஞ்சி, சென்னாவரம், மப்பேடு, இறையாமங்கலம், கசவநல்லாத்துார், கூவம் ஆகிய ஏரிகளில் சீரமைப்பு பணிகள் குறித்து அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

இதேபோல், மிகவும் பழுதடைந்துள்ள பிற ஏரிகள் குறித்தும் கணக்கெடுத்து வருகிறோம்.
அரசிடமிருந்து உத்தரவு மற்றும் நிதி ஒதுக்கீடு வந்தவுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் கூவம் ஆற்றுப்பகுதியில் சேதமடைந்த சோரஞ்சேரி அணைக்கட்டு 5.06 கோடியில் சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட நிர்வாகம்ன ஏரிகள் சீரமைப்பு பணிகளை பருவ மழைக்கு முன் விரைவில் துவங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

related posts