Home விளையாட்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள்

by Jey

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள் பெங்களூருவில் நேற்று முன்தினம் தொடங்கியது பெங்களூரு, 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டங்கள் பெங்களூருவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் உத்தரபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஹர்திக் தாமோர் 115 ரன்களும் (223 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷம்ஸ் முலானி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய உத்தரபிரதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. பெங்காலுக்கு எதிரான மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய மத்தியபிரதேச அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ஹிமான்ஷூ மந்திரி 134 ரன்களுடனும், புனீத் டாட்டே 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய புனீத் டாட்டே 33 ரன்னிலும், ஹிமான்ஷூ மந்திரி 165 ரன்னிலும் (327 பந்து, 19 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர். 105.3 ஓவர்களில் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 341 ரன்களுக்கு அடங்கியது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 54 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது.

இதன் பின்னர் மனோஜ் திவாரி-ஷபாஸ் அகமது நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். நேற்றைய முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. மனோஜ் திவாரி 84 ரன்களுடனும், ஷபாஸ் அகமது 72 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

related posts