கனடாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகளை இறக்குமதி செய்வது இணையும் உற்பத்தி செய்வதையும் கனேடிய சமஸ்டி அரசாங்கம் தடை செய்துள்ளது.
இந்த ஆண்டு இறுதி முதல் இந்த தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு முற்றுமழுதாக தடை செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதன் மூலம் மட்டும் சுற்றுச்சூழல் மாசுறுதல் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் மீள் சுழற்சி அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கனேடய சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்டீவன் குல்பியோல்ட் தெரிவித்துள்ளார்.