தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி உள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அவ்வபோது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு, பரிசோதனை முடிவில், காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்து.
அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டது.
இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்னை காரணமாக விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், டாக்டர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
டாக்டர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் உள்ளார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான கருத்துகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.