Home இலங்கை பணிப்பெண்களாக வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கை பெண்கள்….

பணிப்பெண்களாக வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கை பெண்கள்….

by Jey

வீட்டு வேலை சார்ந்த பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பெண்களின் குறைந்தபட்ச வயதெல்லையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,பணிப்பெண்களாக வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கை பெண்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
வயதெல்லையில் திருத்தம்

வீட்டுப்பணிப்பெண்களாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுபவர்களின் ஆகக்குறைந்த வயதெல்லை 25 வயதாகவும், மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆகக்குறைந்த வயதெல்லை 23 வயதாகவும் பிற நாடுகளுக்கு 21 வயதாகவும் உள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் வயது எல்லையை திருத்துவது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை உபக்குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சர் தலைமையில் இந்த குழுவினை அமைக்க கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த அமைச்சரவை உபகுழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இலங்கைப் பெண்களை வெளிநாடுகளில் வீட்டு மற்றும் வீட்டு வேலைகளில் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஆகக்குறைந்த வயதெல்லை 21 வயதுகளாக திருத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

 

 

 

 

 

related posts