அமெரிக்க செனட் சபை, துப்பாக்கி கட்டுப்பாட்டு யோசனையை நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டம் அமெரிக்க வரலாற்றில் சுமார் 30 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான துப்பாக்கி சட்டமாகுமாக கருதப்படுகிறது.
பதினைந்து குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து 65க்கு 33 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் இந்த யோசனைக்கு ஒப்புதல் அளித்தனர்.
கடந்த மாதத்தில் 30 பேர் கொலை
இந்த யோசனை, கடந்த மாதம் நியூயார்க்கில் உள்ள பல்பொருள் அங்காடி மற்றும் டெக்சாஸின் உவால்டேவில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 31 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, செனட்டில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பைடன் இந்த யோசனையை, சட்டமாக்க கையெழுத்திடுவதற்கு முன்னர், இந்த யோசனை, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த யோசனையின்படி, 21 வயதுக்கு குறைவானவர்கள் ஆயுதக்கொள்வனவில் ஈடுபடுவதற்கு கடமையான விதிமுறைகள் கொண்டு வரப்படவுள்ளன.
இதுவரை 21ஆயிரம் பேர் பலி
உலகின் பணக்கார நாடுகளில் துப்பாக்கியால் அதிக உயிரிழப்பவர்களின் விகிதம் அமெரிக்காவில் உள்ளது.
இதுவரை காலத்தில், அமெரிக்காவில் 20,900 க்கும் மேற்பட்ட மக்கள் துப்பாக்கி வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.