Home Uncategorized கனேடியப் பிராம்டன் பெருநகரில் அமையப் போகும் முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி!

கனேடியப் பிராம்டன் பெருநகரில் அமையப் போகும் முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி!

by Sithivin

முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட லட்சோப லட்சம் ஈழத் தமிழரைநினைவுகூர்கிற  நினைவுத் தூபியின் மாதிரி வடிவத்தை கனடாவின் பிறம்ரன் பெருநகர் இன்று உத்தியோகபூர்வமாகப் பிரகடனப் படுத்தியது. 22 ஜூன் 2022 அன்று  பிரம்ரனில் நிகழ்ந்த இந் நிகழ்வு  புலம்பெயர் தமிழர்வரலாற்றின்  புனித நாள் !!

இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே தமிழ் இனப்படுகொலைக்கான நினைவாலயத்தை கனடாவின்பிறம்ரன் மாநகரசபை ஸ்தாபிக்க முன் வந்தமை மிகுந்த மன மகிழ்வைத் தருகின்றது. கனடாவின் புகழ் பூத்தபூங்காவான செங்கூசி பூங்காவில் பிராம்ரன்  நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தைஒதுக்கியுள்ளது: வசந்த காலத்தில் லட்சோப இலட்சம்  மக்கள் கூடுகின்ற அழகிய பூங்கா  இது.

இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த மிகப் பெரிய இனவழிப்பாக ஈழத்தமிழருக்கு நடந்தேறிய இனவழிப்புஇருந்த போதிலும், அதனை இனவழிப்பு  என்று . நா சபையும், மேற்குலக சமூகங்களும்  இற்றைவரை பேசமறுக்கின்றன.

இந்நிலையில் பிராம்ரன் மாநகரசபையின் தமிழ்இனத்திற்கான இந்த அங்கீகாரம் ஓர் வரப்பிரசாதம் என்றேஎண்ணத் தோன்றுகின்றது.

உலகில் இனவழிப்பில் சிக்குண்டவர்களென யூத,ருவாண்டா மற்றும் ஆர்மீனிய மக்களை அடையாளப் படுத்திஅவர்களுக்கு நினைவுத் தூபி எழுப்புபவர்கள் எம் ஈழத் தமிழ் மக்களின் பேரழிவை பற்றித் தெரிந்தும்பாராமுகமாக இருக்கிற இற்றைநாளில் இந் நிகழ்வு பெரு மகிழ்வு தருகின்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மகத்தான பெருவிழாவின் வரவேற்புச் சிறப்புரையை தமிழ் இனப்படுகொலைதூபி அமைக்கும் குழுவின் உப தலைவரும், கனடா ஒட்டாவா கால்ரன் பல்கலைக் கழகப் பொறியியல் துறைபேராசிரியர் சிவ சிவதயாளன் அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இந்த நினைவுச் சின்ன திட்ட வடிவமைப்பை மேயர் பற்றிக் பிறவுண் மற்றும் பிராம்ரன் நகரசபையின்  பிராந்தியஉறுப்பினர்களான மார்டின் மெடுரெஸ்ட் , பாற் வொற்னி, ஜெவ் போமன், கிரகம் மெக்ரிகோர் ஆகியோர்உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

இந்த நினைவாலய வடிவமைப்பு உலகின் பல நூற்றுக் கணக்கான மாதிரிவடிவங்களில் இருந்துபோட்டியடிப்படையில் தகுதியானதை தேர்வானதாக்கியதன் மூலம் பெற்ற முதன்மைவடிவமாகும். தமிழர் தேசியஇனப் போராட்டத்தின் கனதியை தன்னகத்தே சுமந்த மதிப்பார்ந்த தமிழின் தேசிய மலரான கார்த்திகைப்  பூவாக அமைகிற இந் நினைவாலயத்தை காலநிலை, மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு  என்பவற்றைக் கருத்திற்கொண்டு பொஸ்னியாவின்  சிறப்பு கட்டிட நிபுணர் Ms. Bernia Ramic அவர்கள் மிக நேர்த்தியாகவடிவமைத்திருக்கிறார்.

இந்த நினைவாலயம் 12 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டதாக அமைய உள்ளது. உண்மையில் இதுதமிழரின் 12 உயிர்எழுத்துகளையும், 18 மெய்எழுத்துகளையும் உணர்த்தி நிற்கிற அழகிய தமிழின் அற்புதம்.

தமிழர் தம் தேசத்தில் சிங்கள இனவெறியரசு நடாத்திய நினைத்துப் பார்க்க முடியாத உயிர் இழப்புகளைகூட்டாக நாம் நினைவு கூர்வது புலம் பெயர் தமிழர்களாகிய எமது கடமை.

தமிழர்கள் நிகழ்த்தும் எந்த நினைவு கூர்தலையும்  இராணுவமும், சிறிலங்கா அரசும் தமிழர்கள்  விடுதலைப்புலிகளை நினைவுகூருவதாகவே கருதி எதிர்த்து வருகின்றது.  புலிகளை மட்டுமல்ல அங்கிருந்த ஒட்டுமொத்ததமிழர்களையும் அழித்தொழித்த  மே 18 சிறிலங்கா அரசு  இற்றைவரை  வெற்றி நாளாக அறிவித்து இராணுவஅணிவகுப்புகளுடன் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. போரில் இறந்த சிறிலங்காப்  படைத்துறையினர்வெற்றி வீரர்களாக இந்நாளில் அறிவிக்கப் பட்டுக் கெளரவிக்கப் படுகின்றார்கள்.  ஆனாலும் இலங்கைத் தமிழர்இறந்த தமது உறவுகளை நினைவு கூரக் கூட இலங்கை அரசு தடை விதித்துள்ளது ஒவ்வொரு மே 18 ஒட்டியநாட்களில், வட, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டே கிடக்கின்றன.

இன்னிலையில் பிரம்ரன் மாநகரத்தின் இந்த துணிகரமான முள்ளி வாய்க்கால் நினைவாலய அமைப்பும், ரொறன்ரோ மாநகர தமிழர் இன அழிப்பினை பற்றிய விழிப்புணர்வுக் கல்வித்திட்டச் செயலாக்கமும்  துன்பத்திலும் புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிக் குள்ளாக்கியுள்ளன.

related posts